உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

பதும்; எப்போதாவது வெடித்து விடுவதும் உண்டு.

இவ்வகையான தீப்பெட்டித் தயாரிப்பாளர் தங்கள் தீப்பெட்டியின் மீது “இத்தீக்குச்சி எரியும் போது வரும் வாயுப்புசையை உட்கொண்டுவிடக் கூடாது", என்று எச்சரிக்கை விட்டனர்.

அந்தக் குச்சிகள் எரியும்போது வரும் நெடி மிகவும் ஆபத்தானது. 1831-ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டவராகிய “டாக்டர் சார்லஸ் சௌரியா", என்பவர் பாஸ்பரசுக்குப் பதிலாக 'சல்பைட்' பயன்படுத்தினார். இது உலகெங்கிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், இதிலிருந்து கிளம்பிய நாற்றம், சுவாசிப்பவரின் உடலைக் கெடுத்து சிலரை முடமாக்கியது; சிலரைக் கொன்றது; பலருக்குப் பற்பல நோயை உண்டாக்கியது.

அதன்பிறகு, "காஹென்', “சேவின்" என்ற இரண்டுபேர் பாஸ்பரசை நச்சு நீக்கிப் பயன்படுத் தினர். அதனால் அவர்களுக்கு-ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் - அவர்களின் தயாரிப்புக்கு 1898-ம் ஆண்டில் விற்பனை உரிமை வழங்கப்பட்டது.

19-ம் நூற்றாண்டின் மத்தியில் புதுப்புது வகையான தீப்பெட்டிகள் விற்பனைக்கு வரத்


பஞ்ச -5