பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68


ஏனெனில், ரயிலில் பயணம் செய்கிற ஒருவரோ, அல்லது நடைபாதைவாசி ஒருவரோ. தான் குடித்த பீடி, சிகரெட் இதில் எதையாவது வெளியே வீசி எறியும் போது; அது அருகிலுள்ள உங்கள் வைக்கோல் போர் மீது விழுந்து, தீப்பற்றிக் கொள்ளலாம்.

O படுக்கையில் படுத்துக் கொண்டே புகைபிடிக்கக் கூடாது; புகைத்த பின் அணைக்காமல் பீடி, சிகரெட்டுகளை வெளியே வீசக் கூடாது.

O குழந்தைகளை நெருப்புக்கு அருகிலும், தீப்பெட்டியுடனும் விளையாட அனுமதிக்கக் கூடாது; அவர்களுக்கு எட்டாத உயரத்தில் தீப்பெட்டிகளை வைக்க வேண்டும்.

O தீபாவளி போன்ற விழாக் காலங்களில் குழந்தைகளைத் தனியே பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. இரவில் தாய்மார்கள் படுக்கைக்கு அருகில் விளக்குகளை வைத்துவிட்டுப் படுக்கக் கூடாது. தூக்கத்தில் நம்மை அறியாமலே கால், கைப்பட்டு, பெரிய தீ விபத்தை அவை உண்டாக்கி விடும்.

O கூரை வீடுகளில் சிம்ணி இல்லாத விளக்குகளை உபயோகிக்கக் கூடாது.