உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மண்ணின் மாண்பு

“உலகம் வேறு, நீ வேறு அல்ல;–
உள்ளது ஒன்றே.”

–அத்வைதம்

மலாபுரம் ஒர் அழகிய கிராமம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகள். தென்னை, மா, பலா போன்ற மரங் களினால் அடர்ந்து செழித்து வளர்ந்த தோட்டம் துரவுகளுடன் கூடிய இயற்கை வளம் பொருந்திய கிராமம்.

ஊரைச் சுற்றிலும் வேலி போட்டாற் போன்று அழகிய பாலாறு வளைத்து, நெளிந்து சென்று கொண்டிருந்தது.

நாகரிகத்தின் வாடை படியாத அந்தக் கிராம மக்களின் முக்கிய தொழில் விவசாயம். சிலர் தச்சுத் தொழில், கட்டிட வேலை போன்ற தொழில்களும் செய்து வந்தனர்.

அந்த ஊரிலுள்ள இளஞ்சிறுவர்களுக்கு கடிதம் படிக்கவும், கையெழுத்துப் போடவும்