பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

O நெருப்போடு கூடிய சமையல் சாம்பலை-குப்பையில் கொட்டக்கூடாது.

இதுபோன்ற கவன உணர்வுடன் நடந்து கொண்டால், கிராம மக்களால் தீ விபத்தைத் தடுத்துவிட முடியும்.

நகரங்களின் தன்மை இதற்கு மாறானது! வைக்கோல் போரும், சிம்ணி விளக்கும் அங்கு இல்லை, ஆயினும் அங்கே அடிக்கடித் தீ விபத்து நிகழ்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் மின்சாரத்தைக் கவனமாகக் கையாளாததுதான்.

O மின்சாரத்தை உபயோகிக்கும்போது, அளவிற்கு மீறிய மின் இணைப்புக் கம்பியை உபயோகிக்கக் கூடாது. மின்கம்பி, மற்றும் மின் இணைப்புக்களை காலா காலத்தில் பரிசோதிக்க வேண்டும்.

O மின்சார சலவைப் பெட்டிகளை உபயோகித்து முடிந்தபின், ஸ்விட்சை நிறுத்த மறந்து விடக் கூடாது.

O மின்சார நெருப்பு ஏற்பட்டால், தண்ணீரை ஊற்றி அணைக்க முற்படக் கூடாது; எரிகிற பகுதியின் மீது மண்ணைப் போடவேண்டும். தீ எரிவதற்குப் பிராணவாயு தேவைப்