பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

விரைவில் களைப்பேற்பட்டுவிடும், சுவாச உறுப்புக்களில் அடைப்புகள் ஏற்பட்டு, தீக் காயங்கள் ஏற்படும். இத்தகை ஆபத்தான சூழ்நிலையில் இதயத்துடிப்பும் மிக அதிகமாகிறது.

மனித சகிப்புத் தன்மைக்கு மீறிய அளவில் வெப்பத்தோடு போராடும் போது, சில சமயம் மரணமும் ஏற்படும். தீப்பிடித்த கட்டிடத்தில் 150 டிகிரி செண்டிகிரேட் வெப்பம்; வரையில் 20 முதல் 40 வினாடிகளுக்குத் தங்கியிருக்க முடியும். அதற்கு மீறினால்-உயிருக்கு ஆபத்து ஏற்படும். 65 டிகிரி செண்டிகிரேடுக்கு மேல் உள்ள இடத்தில் புகுந்து மீட்பு வேலையில் ஈடுபடுவது மிகவும் அபாயமானது.

ஏனெனில்-

புகை மண்டலத்தில் உயிர்வாழ்வதற்கு வேண்டிய பிராண வாயுவின் அளவு குறைவதால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

◯ காற்றிலுள்ள பிராண வாயுவின் அளவு, 10 முதல் 14சதவிகிதத்துக்குக் குறைந்துவிட்டால்; மனிதன் விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும், தன்னையறியாமல் தவறான முடிவுகளை எடுக்கிறான்.