பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

மாரியப்பன் மூச்சிறைக்க ஓடி மண்டபத்திற்கு வந்தான்.

வந்ததும் வராததுமே, "கதையெல்லாம் சொல்லி முடிச்சாச்சா?" என்று ஆவலோடு கேட்டான்.

“கதை இருக்கட்டும். உன் தங்கை சாந்திக்கு இப்ப உடம்பு எப்படி இருக்கு? அதை சொல்லு," என்று அழகப்பன் அவசரமாகக் கேட்டான்.

"அது ஒண்ணுமில்லே. பாவாடையிலே தீப்பிடிச்சதும் பயந்து போய் அங்கேயும் ஓடிக் கத்தியிருக்கா. அதுக்குள்ளே, பெரியப்பா அவ மேலே தண்ணியக் கொட்டி தீயை அணைச்சிட்டாரு.

நல்ல வேளை கால்லே தான் லேசா காயம் டாக்டரு பார்த்துட்டு தண்ணீரை ஊத்தினது தப்புன்னு சொல்லி; மருந்து, ஊசி எல்லாம் போட்டாரு.

உடையிலே தீப்பிடிக்கிற போது உடம்பு வழக்கத்தைவிட அதிகச் சூடான நிலையிலே இருக்கும். அப்போது தண்ணியை ஊத்தினா- திடீர்ன்னு உடம்பு குளிர்ந்து-ஜன்னி வந்துடும். நல்ல வேலை சாந்திக்கு ஒண்ணும் ஆகல்லேன்னு மருந்து போட்டு, கையிலே மாத்திரையெல்லாம் குடுத்து, 'வீட்டுக்குப் போகலாம்னு,' அனுப்பிட்