பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. தென்றலழகன் கூறிய
காற்றின் கதை


'கண்ணால் என்னைக் காண முடியாது; ஆனாலும்-
நான் இல்லை என்று உங்களால் சொல்லமுடியாது;

என் பெயர் என்ன?"

-ஒரு விடுகதை


ன்னும் இரண்டே ரன் எடுத்தால் போதும்; இந்தியா ஆஸ்திரேலியாவை வென்று வெற்றி வாகை சூடிவிடும் என்ற நிலையில் ரவிசாஸ்திரி பாட் செய்து கொண்டிருந்தார். அடுத்து-

ஆஸ்திரேலிய வீரர் மாத்யூஸ் வீசிய பந்தை ரவிசாஸ்திரி வெகு லாகவமாக அடித்து ஒரு ரன். சேர்த்தார். இப்போது இந்தியா வெற்றி பெறத் தேவையானது ஒரே ஒரு ரன்தான் என்கிற நிலைமை ஏற்பட்டபோது அழகப்பன் தன்னையும் மறந்து "வெல்டன் சாஸ்திரி; விக்டரி ஃபார் இந்தியா” என்று கத்தினான்.

சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் ரசிகர்களிடையே ஏற்பட்டிருந்த பரபரப்பும், மகிழ்ச்சி ஆரவாரமும், டிரான்சிஸ்டரைத் திணர அடித்துக் கொண்டிருந்தது.