பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

சொன்னியே உனக்கு என்ன ஆச்சு?" என்று ஒன்றும் புரியாமல் கேட்டான்.

“ஒண்ணும் இல்லே கந்தா-இந்தியா ஜெயிக்கும்னு ரொம்ப ஆசையா எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன் “டை” (Tie) ஆயிடுச்சு..."

"ஆனா உனக்கென்ன? இதபாரு அழகப்பா... நம்மை எல்லாம் ஒரு பொருட்டா மதிச்சு... எங்கேயோ உள்ள தேவகுமாரங்க - அவங்க எங்கே... நாம எங்கே... -ஆனாலும் எவ்வளவு ஆசையா, அன்பா நம்மைத் தேடி வந்து எவ்வளவு நல்ல நல்ல கதையெல்லாம் சொல்றாங்க.

நேத்திக்கு மாரியப்பன் வரல்லேங்கறதைக்கூட எவ்வளவு அக்கறையா கேட்டு விசாரிச்சாங்க, அப்படிப்பட்டவங்க இன்னிக்கு உன்னைப் பத்திக் கேட்டா நாங்க என்ன பதில் சொல்லுவோம் யோசிச்சுப் பாரு"

அழகப்பன் யோசித்தான். ஆமாம் இந்த வருத்தம் கொஞ்ச நேரம். இது அடுத்த டெஸ்ட்டில் மகிழ்ச்சியாகவும் மாறலாம். ஆனால் தேவ குமாரர்கள் எவ்வளவு நல்லவர்கள். இந்தக் கிராமத்துச் சிறுவர்கள் மீதுதான் எவ்வளவு அன்பு காட்டுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வரும் கதை என்கிற பெயரில் எனக்குத் தெரியாத