79
அல்லது ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய எவ்வளவு நல்ல அறிவியல் விஷயங்களைப்பற்றி எல்லாம் விளக்குகிறார்கள்.
இத்தனை வருஷப்படிப்பில் நான் இதில் கால் பகுதியைக் கூடப் படித்ததில்லையே-இன்று நான் போகா விட்டால் அவர்கள் ஒன்றும் என்னைச் சபித்துவிடப் போவதில்லை-ஆனால் நஷ்டம் எனக்குத்தானே! மேலும்; தங்களை அலட்சியப்படுத்துவதாக அவர்கள் மனம் ஒரு வேளை புண்படவும் செய்யலாம்...
"என்ன அழகப்பா யோசிக்கறே?”
"ஒண்னுமில்லே கந்தா... வா போகலாம்..."
அவர்கள் இருவரும் மண்டபத்தை அடைந்த போது, தென்றலழகன் கதை சொல்லிக் கொண்டிருந்தான். எல்லோரும் ஆவலோடு அதைக் கேட்டு கொண்டிருந்தனர்.
அழகப்பன் வெட்கத்தோடும், கந்தசாமி பாதிக் கதை போய்விட்டதே என்கிற வருத்தத்துடனும்-இருவரும் சற்று ஓரமாக வந்து அமர்ந்து கொண்டனர். தென்றலழகன் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தான்.
நண்பர்களே...! மனிதன் உணவு இல்லாமல் சில மாதங்கள் உயிர் வாழ்ந்து விடலாம்; நீர் இல்