உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

லாமலும் சில நாட்களை உயிருடன் ஓட்டி விட முடியும்; ஆனால் காற்று இல்லாமல்-சில வினாடிகள் கூட உயிர் வாழ முடியாது. காற்று மனிதனின் உயிர் மூச்சு. இயற்கையின் ஓர் அற்புதப் பொருள்.

காற்று கண்களுக்குப் புலப்படுவது இல்லை. அதற்கென்று தனிப்பட்ட எந்த ஒரு உருவமும் இல்லை. ஆயினும் அதனை இல்லை என்று மறுப்பதற்கில்லை. அதை ஸ்பரிசத்தால் உணர முடிகிறது. மரம், செடி, கொடிகள் அசைவதால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக-நாம் காற்றினால் தான் உயிர்வாழ்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ளாமல் முடியாது.

அதோடு -

காற்றிலுள்ள வாயுக்கள் அணுக்களால் நிறைந்தவை. கண்ணுக்குப் புலப்படாத கோடானு கோடி அணுக்களுக்குமே எடை உண்டு. அதன் படி வாயுவின் அணுக்களால் காற்றுக்கும் எடை உண்டாகிறது. வாயுக்களை விஞ்ஞானிகள் 'பொருள்' பட்டியலில் சேர்த்துள்ளதால்-'வாயு' அணுக்களால் ஆன காற்றுப் பொருள் பட்டியலில் இடம் பெறத் தக்கதாகிறது.

நாம் வாழும் உலகத்தில் மேற்பரப்பு நிலம், நீரால் சூழப்பட்டது என்றால்; அவற்றிற்கு சில மைல்கள் உயரத்திற்கு உலகம் முழுவதையும் வாயு மண்டலம் போர்வைபோல மூடியுள்ளது.