பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82உலகம் தோன்றி, நீர், நிலம் இவை உருப்பெற்று வெகுகாலத்திற்குப் பிறகே காற்று பிறந் தது. அப்படி முதன் முதலாகப் பிறந்த காற்றில் உயிர்கள் வாழ்வதற்கு இன்றி அமையாத பிராண வாயுஇல்லை. அவற்றில் கரியமிலவாயு, நைட்ரஜன் வாயு, கந்தகப்புகை, நீராவி ஆகியவை நிரம்பியிருந்தன. பிராணவாயு அந்தக் காற்றுக் கலவை யில் இல்லாத காரணத்தால், புல் பூண்டு, மரம் செடி கொடிகள் இல்லாத நிலையில் உயிரினங்களும் தோன்ற இயலவில்லை.

நிலம் நீர் பிரிந்து; உலகம் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கிடையில் வானவெளியில் உள்ள வாயுக்கலவையிலும் படிப்படியாகப் பலப்பல மாறுதல்கள் தோன்றி இப்போது உள்ள பிராண வாயுக் கலவையே நிலை பெற்றது. அதன் பிறகு உலகம் விரித்தது. உயிரினங்கள் தோன்றின.

ஆயினும், உயிர்வாழ இன்றியமையாத பிராணவாயு என்னும் ஒருவாயு, வாயுக் கலவை யில் இடம் பெற்றிருக்கிறது என்கிற உண்மையை சுமார் நானுாறு ஆண்டுகளுக்கு முன்பு 'இராபர்ப்ஃபாய்ட்' என்கிற ஆங்கில விஞ்ஞானி 1600-ம் ஆண்டில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார். பிறகு தான் உலகம் அதை உணரத் தலைப்பட்டது.

அதன் பிறகு இடைவிடாது நடந்த பல சோதனைகள் நடைபெற்றன. 1774-ம் ஆண்டு

பஞ்ச-6