83
இத்தனை சிறப்பு வாய்ந்த பிராண வாயு உலகத்திலுள்ள மூலப்பொருள்களில் பெரும் பகுதியான இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு கூட்டுப்பொருளாகவே திகழ்ந்து வருகிறது.
உலகத்தில் உள்ள நீரில் நூற்றுக்கு 90 சத விகிதம் பிராண வாயுவாகவும்; உலகில் உள்ள பாறைகளில் பாதி அளவு பிராணவாயு கலந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். கரியமில வாயுவின் பங்கும் உண்டு.
பிராண வாயுவின் சிறப்பான இயல்பு என்ன வென்றால், உலகிலுள்ள பெரும்பாலான மூலப் பொருட்களுடன் வெகு எளிதில் கூடிக் கலந்து நிற்கக் கூடியது. உதாரணத்திற்குத் தண்ணிரைப் போல-
பலவகையான வாயுக்களைக் கொண்ட காற்று மண்டலம், உலகிலுள்ள மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு மட்டுமின்றி, தொழில்செய்து பிழைக்கவும்; நாகரீக வளர்ச்சிக்கு உதவும் விஞ்ஞானத்திற்கு மிகச் சிறந்த நண்பனாகவும் திகழ்கிறது.
சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய நாட்டினர் கடல் வாணிபம் செய்ய முற்பட்டனர்.
சிறிய சிறிய படகுகளின் மூலம் ஆற்றுப்பாதை வழியாகவும், பாய்மரம் கட்டிய படகுகள், பெரிய,