மரக்கலங்கள் ஆகியவை மூலமாகவும் கடலில் காற்றின் உதவியோடு, வாணிபம் செய்து வந்தனர்.
நீராவிக் கப்பல்கள் கண்டுபிடிக்கும் வரை நம் நாட்டில் மீன்பிடித் தொழில் முதல், கடல் பயணம், வாணிபம் வரை கட்டு மரங்களையும், மரக் கப்பல் களையும் கொண்டு காற்றின் உதவியோடு தான் நடந்து வந்தன.
கடலில் பிழைப்பு நடத்துகிறவர்களைக் காக் கும் தெய்வமாகத் திகழும் காற்று, சில சமயங்களில் உயிர்ப் பறிக்கும் கோர அரக்கனாக மாறி, பெருப் புயலாகவும் சூறாவளியாகவும் மாறுவதுண்டு. ஆயினும் காற்றிலிருந்து எவராலும் ஒதுங்கியோஅல்லது காற்றை வெறுத்தோ வாழ முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உயிர் மூச்சே காற்றுத் தானே!
பறவையைப் பார்த்து மனிதன் விமானம் படைத்தான். நவீன இயந்திர வசதிகளுடன் கூடிய விமானத்திற்கும் காற்றின் ஒத்துழைப்பு இன்றி யமையாததாகும.
நமது உடலை பல்வேறு தொழில் புரியும், சிறந்த-நுண்ணிய தொழிற்கூடமாகக் கொள்ளலாம்.