பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
86

ஓட்டத்தில் கலந்து கோடிக்கணக்கான உயிர் அணுக்களை அடைகின்றன. அதேசமயம், நாம் சுவாசிக்கிறது.காற்றிலுள்ள பிராணவாயுவும்!ரத்தத்திலுள்ள் சிவப்பு அணுக்கள் மூலம் உயிர் அணுக்களை அடைகின்றது.

அந்தப் பிராணவாயு நம் உணவிலிருந்து கிடைக்கும் சர்க்கரை மற்றும் பலதரப்பட்ட கொழுப்புச் சத்துக்களையும் எரிபொருளாகப் பயன்படுத்தி, அவற்றை எரித்து நம் உடலுக்குத் தேவையான வெப்பத்தையும், உயிர் உறுப்புக் களுக்குத் தேவையான சக்தியையும் தருகிறது. இதனால், நமது உடல் தேவையான வெப்பத் துடன் இருக்கவும்; நமது உடல் உறுப்புக்கள் உழைக்கவும்; தொடர்ந்து இதயம் இயங்கி, ரத்த ஒட்டத்தை தடையின்றி நடத்திக் கொண்டிருக்க வும்-பிராண வாயு எவ்வளவு முக்கியமானதென்று உணரமுடிகிறதல்லவா? இந்தப் பிராணவாயுவை நாம் காற்று அலைகளிலிருந்து பெறுகிறோம்.

இன்றைய மனித நாகரீகத்தின் விஞ்ஞான வளர்ச்சியில் காற்று-மனிதனுக்கு வெகுவாகக் கைகொடுத்து உதவுகிறது.

இந்த உலகம் முழுவதும் ஒலி, ஒளிமயமாகத் திகழ்கின்றது என்றால்-அதை எடுத்துச் சென்று நமக்கு அளிப்பது காற்றிலுள்ள ஒலி அலைகளே யாகும்.