உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
89


ஓரிடத்திலிருந்து புறப்படும் ஒலியை வேறு இடத்திற்கு ஏந்தி எடுத்துச் செல்லும் சாதனமாக ஒலி பரவுவதற்கு உதவியான மீடியமாக காற்று திகழ்வதால்-இந்தக் காற்றை மீடியமாக வைத்துத் தான் வானொலி-ஒலிபரப்பு நிகழ்ச்சிகளைச் செய்து வருகிறது; தொலைபேசிகள் இயங்கி வருகின்றன.

காற்று ஒலியை மட்டுமல்ல; ஒளியையும்; அதுவும் பலவித வண்ணங்களில் மூல கேந்திரத்தி லிருந்து சுமந்து வந்து அளிப்பதுதான் தொலைக் காட்சி-அதாவது டெலிவிஷன்.

இந்த ஒலி அலைகளை விரும்பியபடி மாற்றம் செய்து; ஒளிப்பதிவு நாடாவிலும்; திரைப்படச் சுருள்களிலும் விரும்பியபடிப் பதிவு செய்து கொள்ளுமளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது.

இந்த ஒலி அலைகளின் திறனை வைத்துத் தான் தொலைபேசி ஆராய்ச்சி துவங்கியது. இதனை முதன் முதலாக கண்டறிந்தவர் டாக்டர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல்' என்னும் விஞ்ஞானியாவார்

தந்தி; செய்தித்துறை தொடர்பாகப் பல பல சோதனைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த கிரகாம்பெல்லுக்குப் புகழைத் தேடித் தந்தது தொலைபேசியே!