தொலைபேசியின் மூலம் உள்ளூரில் மட்டுமே ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ள முடியும் என்கிற பழைய நிலைமை மாறி, இப்போது உலகத்தின் எந்த மூலையில்-எத்தனை ஆயிரம் மைல்கள் கடல் கடந்து இருப்பினும், விரைவாகத் தொடர்பு கொள்ளத்தக்க வசதி பெருகிவிட்டது.
இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் காற்றும்; அது சுமந்து செல்லும் ஒலி அலைகளுமே யாகும். பிறரது பேச்சின் அலையையும்; இசையின் இனிமையையும் உலகம் முழுவதும் ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் வானொலி நிலையங்கள் அதற். கான நவீன நிலையங்களை நிர்மாணித்து அங்கி ருந்து எழும்-இசையோ, பேச்சோ-எந்த ஒலியை யும்; நிலையம் எழுப்பியிருக்கும் மிகவும் உய ரமான ஏரியல் மூலமாக வானவெளியில் மிகுந்த சக்தி யுடன் பலவித அலை வரிசைகளில் கலந்துவிடுகிறது.
அவற்றை அந்தந்த அலைவரிசைகளில் ஏற்று வெளிப்படுத்த இந்த ரேடியோ பெட்டிகளினுள் டிரான்சிஸ்டர்களும், ஸ்பீக்கரும் உள்ளன.
காற்றுடன் கலந்து; கண்ணுக்குப் புலப்படாத இந்த மர்ம ஒலி அலைகளுக்கு மின்காந்த அலைகள் (Electro-Magnetic Waves) விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த மின்காந்த-