உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

அலைகள் காற்றுடன் கலந்து உறவாடிக் கொண்டிருப்பதை முதன்முதலில் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தவர் ஸ்காட்லாண்ட் நாட்டைச் சேர்ந்த (James Clerk Maxwell) ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ் வெல்’ என்னும் விஞ்ஞானியாவார்.

இவரது கண்டுபிடிப்பான மின்காந்த அலைகளைத் தொடர்ந்து ஆராய்ந்து, அந்த அலைகள் பற்றிய பல அபூர்வ விஷயங்களை மேலும் கண்டறிந்தவர், 'ஹென்றி ஹெர்ட்ஸ்' என்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி.

நம்மால் சாதாரணமாக ஒரு நொடிக்கு பதினாறிலிருந்து சுமார் இருபதினாயிரம் அதிர்வு, உடைய ஒலிகளைத் தான் கேட்க முடிழம்.

சாதாரணமாகக் காற்று சுமந்து செல்லும் ஒலி அலைகளின் வேகத்தைவிட வானொலி மூலம் அனுப்பப்படும் ஒலி அலைகள் கிட்டத்தட்ட பத்து லட்சத்திற்கு மேற்பட்ட வேகத்தில் விரைவாகப் பயணம் செய்கின்றன. இந்த மின்காந்த அலை களின் பயணம், வான வெளியில் எல்லா திசைகளுக்கும் ஒரு வினாடிக்கு 1,86,000 மைல்கள் வீதம் கடந்து செல்கின்றன.

நாம் சாதாரணமாக ஒரு அறையினுள் சென்று, அதன் கதவுகளை அடைத்துக் கொண்டு என்ன கூக்குரலிட்டாலும் அடுத்த அறைக்குக் கூடக் கேட்பது இல்லை. ஆனால்—