இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வானொலி போன்ற சாதனங்களினால் அனுப்பப்படும் மின்காந்த ஒலி அலைகள் எந்தத் தடைகளையும் மீறி, சுவர்கள், மதில்கள், மலைகள் அனைத்தையும் கடந்து ஊடுருவிச் செல்லும் சக்தி படைத்தவை.
அவற்றைச் சுலபமாக நமது ரேடியோவிலுள்ள டிரான்ஸிஸ்டர்கள் கிரகித்துக் கொண்டு நமக்கு வழங்குகின்றன.
காற்றைப்பற்றி இன்னும் அனேக புதிய புதிய விஷயங்களை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பது என் விருப்பம் அதை இன்னொரு சமயம் கூறுகிறேன்” என்று கூறி விடை பெற்றுக்கொண்ட தென்றலழகன்; கையிலிருந்து டிரான்ஸிஸ்டரை அழகப்பனிடம் சிரித்தபடி நீட்டினான்.