உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




மேகநாதன் சொன்ன ஆகாயத்தின் கதை


"நீருண்டு, பொழிகின்ற காருண்டு விளைகின்ற
நிலமுண்டு பலனு முண்டு
நிதியுண்டு. துதியுண்டு. மதியுண்டு கதிகொண்ட
நெறியுண்டு, நிலையு முண்டு."

-அருட்பா.


குப்புசாமி மாரியப்பனை அழைத்துக்கொண்டு சிங்காரம் வீட்டிற்குப் போனான். பிறகு எல்லோரும் வழியில் தங்கள் நண்பர்கள் ஒவ்வொருவரையும் அழைத்துக் கொண்டு வேகம் வேகமாக மண்டபத்திற்குச் சென்றனர்.

மேலே வானம் இருண்டு-கரிய மேகங்களால் குழப்பட்டு எந்த நிமிஷமும் ஆகாயம் பொத்துக் கொண்டு பெருமழை பெய்யும்போல் பயமுறுத்திக் கொண்டே இருந்தது.

ஆனால் அனைவரும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்த ஐந்து நிமிஷத்திற்கெல்லாம் பெருங்-