பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"இந்த மழையில் நீங்கள் எல்லாம் வராமாட்டர்கள் என்று எண்ணினேன்” என்று உலகநாதன் கூறி முடிக்கு முன்னர், "நாங்கள்ளாம் மழை வரும்னு தெரிஞ்சு ரொம்ப நாழிக்கு முன்னமேயே இங்கே வந்துட்டோம்” என்று மிக்க மகிழ்ச்சியுடன் பதில் கூறினான் பொன்னுசாமி.

"ஆமாம்...எங்களுக்கு ஒரு சந்தேகம். நீங்கள் எல்லோரும் இங்கே எங்களிடம் கதை கேட்டுவிட்டு நேரம் சென்று வீட்டிற்குப் போகிறீர்கள்; உங்கள் அப்பா அம்மா கோபித்துக் கொள்வதில்லையா?” என்று மேகநாதன் கேட்டான்.

உடனே எல்லாச் சிறுவர்களும் கோரசாக, 'கோவிச்சுக்க மாட்டாங்க. நீங்க சொன்ன கதையை எல்லாம் எங்க அப்பா, அம்மா, பாட்டி எல்லேருகிட்டேயும் ராத்திரிச் சொல்லுப்பிட்டுத் தான் தூங்குவோம். அவங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். நல்ல நல்ல விஷயமா-உபயோகமா நீங்க எங்களுக்குச் சொல்லறீங்களாம். அவங்க எல்லாருக்கும் உங்களையெல்லாம் பார்க்கணும் போல ரொம்ப ஆசையாயிருக்குன்னு சொன்னாங்க" என்றனர்.

உடனே மேகநாதன், 'என்ன பதில் சொன்னீர்கள்?’ என்று கேட்டான்.