பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"உங்ககிட்டேச் சம்மதம் கேட்டு அழைச்சிட்டுப் போறதாகச் சொல்லியிருக்கோம்” என்றனர்.

சிரித்தபடி, "அதுதான் சரி,” என்று சொன்ன மேகநாதன் கதையை ஆரம்பித்தான்.

'இப்போ, இடி மின்னலோடு மழை பெய்து கொண்டிருக்கிறது. மழை எப்படிப் பெய்கிறது என்பதை முன்பே கங்காதரன் உங்களுக்குச் சொல்லி விட்டான்.

இந்த மின்னல் ஏன் மின்னுகிறது; எப்படி உண்டாகிறது; இடி இடிப்பானேன்; என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

'தெரியாது அண்ணா”-ஒருமித்த குரலில் அனைவரும் கூறினர்.

மேகநாதன் திரும்பி, "உனக்குத் தெரியுமா அழகப்பா?” என்று கேட்டான்.

"வானில் மின்சாரம் பாயும்போது தெரியும் ஒளியை, "மின்னல்" என்கிறோம். அதோ போல் மின்சாரம் மோதும் ஒலியை "இடி" என்கிறோம்' என்றான் அழகப்பன்.

"ரொம்ப சரி. இந்த மின்சாரம் எங்கிருந்து வானத்திற்குப் போகிறது என்று தெரியுமா அழகப்பா?”