உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதற்கு மாறாக நடு, மற்றும் கீழ்மட்ட மேகத்தில் எதிர் மின்சாரத் துகள்கள் அதிகமாகவும் சில சமயங்களில் இப்படி மாறுபட்டும் இருக்கும்.

அப்போது மேகத்திலுள்ள இந்த மின்சாரத் துகள்கள் தங்களின் குறைபாட்டை ஈடு செய்து கொள்ள முயலும்.

அவ்வாறு முயலும் போது எதிர் மின்சாரத் துகள்கள் அதிகமாயுள்ள அணுக்களை தோக்கியும்; எதிர் மின்சாரத் துகள்கள் குறைவாக உள்ள அணுக்களை நோக்கியும் அவை பாய்கின்றன. இவ்வாறு பாயும் மின்சாரப் பாய்ச்சலே நமது கண்களுக்கு மின்னலாகத் தோன்றுகிறது.

இந்த மின்சாரப் பாய்ச்சல், ஒரே மேகத்திடையேயும் நிகழலாம்; அல்லது இரண்டு மூன்று மேகங்களுக்கிடையேயும் பாயலாம். சில சமயங்களில் மேகத்திலிருந்து பூமியை நோக்கியும் இந்த மின்சாரம் பாயக் கூடும்.

மேகத்தில் ஏற்படுகிற மின்சாரம், தரையில் சில சமயம் எதிர் மின்சாரத்தைத் தோற்றுவிக்கிறது. நேர் மின்சாரமும், எதிர் மின்சாரமும் ஒன்றை ஒன்று கவரக் கூடியவை என்பது குறிப்பிடத் தக்கது. இம்மாதிரி நிலையில் மேகத்திலுள்ள நேர் மின்சாரம்-தன்னால் பூமியில் தோற்றுவிக்கப்பட்ட எதிர் மின்சாரத்தை நோக்கிப் பாய்கிறது.