பக்கம்:படித்தவள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



‘கிரைம்கள் இன்றைய செய்திகள். அவை ஒவ்வொன்றும் சிறுகதைகள் ஆகிவிடுகின்றன.

ஒரு சப் இன்ஸ்பெக்டர் அவர் முரடர்; எப்பொழுதும் அடித்து விட்டுத்தான் பேசுவார்.

அந்தப் பழக்கம் தன் கீழ்ப் பணி செய்யும் காவலர் ஒருவர்மீது காட்டி விட்டார்.

அவன் தான் வாங்கிய கடனை உடனே திருப்பிக் கொடுத்தான்.

அதற்குப் பிறகு அவர் மிகவும் சாதுவாகி விட்டார். பண்படுத்தப்பட்டார். இப்படி ஒரு செய்தி வந்தது.

இது ஒரு சிறுகதையாக எழுத முடிகிறது. பலசிறுகதைகள் பத்திரிகைச் செய்திகளில் உதயமாகின்றன. அதனால்தான் ‘கிரைம்’ துணுக்குகளை விரும்பிப் படிக்கிறார்கள். செய்திகளுக்காக அல்ல; சுவையும் புதுமையும் தருவதால்.

இதில் ஒருசில நிகழ்ச்சிகள் சித்திரிக்கப்படுகின்றன. ‘பத்திரிகை படி’ என்ற தலைப்பைப் பெற்று உள்ளது. ஒவ்வொரு கிரைம் நிகழ்ச்சியும் ஒரு சிறுகதை என்பது அறிவிக்கிறது.

அறிமுகமாகச் சில கீற்றுகள் இங்குத் தரப்பட்டுள்ளன. இனி மின்னல்கள் உள்ளே ஒளிவிடும்; இவை கண்ணைப் பறிக்கா; மனதைப்பறிக்கும்.

ரா. சீனிவாசன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/10&oldid=1144347" இலிருந்து மீள்விக்கப்பட்டது