பக்கம்:படித்தவள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 Umré? அவன் ஒவ்வொரு ஞாயிறும் நகைச் சுவை நிகழ்ச்சி போல் வந்து சேர்ந்து விடுவான். அவனை நினைக்கும்போது 'இன்ப மயமே வருவது போன்று இருக்கும். ஏதாவது கோமாளித்தனமான செய்திகளைக் கொண்டு வருவான். அதனால் அவனை இன்பமயம் என்றே பெயரிட்டு அழைத்தோம். தொலைக் காட்சியில் சில வாரங்களில் நிகழ்ச்சிகள் தடைப்பட்டு விடுவதும் உண்டு; அவன் வருகை தடைப்பட்டதே இல்லை. அவன் சரியாக எட்டு முப்பதுக்கு வந்துவிடுவான், என்பது என் வீட்டுக்காரி ஆனந்திக்குத் தெரியும். அவன் வந்து வராததற்கு முன் ஒரு கோப்பையிலே கொண்டு வந்து வைத்தாள். அதை நாங்கள் இரண்டு கப்புகளில் ஊற்றிக்கொண்டு குடிப்பது வழக்கம். "டீயா? காப்பியா?" என்று கேட்டான். "குடித்துப் பார்த்துப் பிறகுதான் சொல்லமுடியும்" என்றேன். "அதாவது சொல்லமுடியுமா?" என்றான். "மீடியம் என்று ஆனந்தி பதில் சொன்னாள். "இரண்டும் கலந்த கலவை; எதுவேண்டுமானாலும் நினைத்துக் கொண்டு குடிக்கலாம்" என்றாள். "அவரவர் விருப்பப்படி இது சுவைதரும்" என்றாள். இந்த நிகழ்ச்சியே சுவைமிக்கதாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/100&oldid=802373" இலிருந்து மீள்விக்கப்பட்டது