பக்கம்:படித்தவள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 99 "நான் Hot drink குடிப்பது இல்லை என்று என் நாயகிக்குச் சூள் உரைத்துத் தந்துவிட்டேன்" என்று கூறினான். ஒரு திருநீலகண்ட நாயனாரை நினைவு படுத்தினான். "தீண்டேல் எம்மைத் திருநீல கண்டம் ஆணை” என்று கூறியதால் அந்த நாயனார் எந்தப் பெண்ணையும் தொடுவதை நிறுத்திவிட்டாராம். இந்த அறுவை தான் தந்த சூள் உரைக்குக் கட்டுப்பட்டுச் சூடாக இருக்கும் பானம் எதையும் பருகுவது இல்லையாம். ஆனந்தன் சட்டம் படித்தவன்; அதையே தொழிலாகக் கொண்டு நீதி மன்றம் ஏறித் தனக்கு நிதி கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டு வருகிறான்; நீதிப் பிழைப்புத் தக்க நிதிநிலையைத் தரவில்லை; அது அவன் வாழ்க்கை நியதியாக இருந்தது. - "டீ காப்பி இவை hotdrinks என்று நான் சொல்கிறேன்" என்கிறான். "தமிழில் பேசியிருந்தால் இந்தச் சிக்கலே வந்திருக்காது” என்றேன். "மேல் முறையீடு செய்து இருக்கிறேன். இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. பிறகு தான் குடிக்க முடியும்" என்றான். 'மிளகு ரசம் கொண்டு வந்து வைத்தாள்; அது சூடு ஆறுகிற வரை பொறுத்து இருந்தான்; வாய் வைத்துக் குடித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/101&oldid=802375" இலிருந்து மீள்விக்கப்பட்டது