பக்கம்:படித்தவள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 शााdf "மிகவும் சுவைக்கிறது" என்றான். "என்னடா உனக்கு உடம்பு" என்றேன். "நஞ்சை நண்பர் தந்தால் அதை உண்பதுதான் நாகரிகம்" என்றான். பாரதியும் வள்ளுவரும் அவன் உள்ளிருந்து பேசினார்கள். "டேய் என் மனைவி இன்னைக்கு ஹல்லோன்னு கூப்பிட்டாள்; எனக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. இவளா என் மனைவி என்ற வினா எழுந்தது" என்று கூறினான். "இதிலே என்னடா அதிசயம்? ஆங்கிலத்திலே உன்னை அழைத்திருக்கிறாள்" என்றேன். 'இது வரை என்னை தே' என்று தான் அழைப்பாள்; கழுதை என்று சொல்வது போல் அது இருக்கும். தே உங்களைத்தான் என்று கூப்பிடுவாள்; இன்னைக்கு ஹல்லோ என்று கூப்பிட்டாள்" என்றான். “காரணம்'. "ஆபீசு லேடி யாரோ என்னைக் கூப்பிட்டு இருக்கிறாள். ஹல்லோ ஆனந்த்' என்று அழைத்திருக்கிறாள்: கேட்க இனிதாக இருந்திருக்கிறது. காப்பி تغاكب அடித்துவிட்டாள். "தினமும் அவளைக் கூப்பிடச் சொல். உன்னைச் சேர்த்துக் கட்டிக் கொள்வாள்” என்றேன். "முயற்சி செய்கிறேன்" என்றான். உடனே என் மனைவி மீது பாய்ந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/102&oldid=802377" இலிருந்து மீள்விக்கப்பட்டது