பக்கம்:படித்தவள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 103 "ஐயா தமிழ்ச் சான்றோரே! ஐயம் திரிபு அறக் கற்ற மெய்ஞ்ஞானியே! ஐந்து இலக்கணமும் அறிந்த அறிஞர் பெருமகனே! என்னை நீர் கம்மினாட்டி என்று எப்படி அழைக்கலாம்; இது தருமமோ? நியாயம்தானா?" என்று கேட்டேன். - "இதற்கு இலக்கியச் சான்றும், புராணக் கதைச் சார்பும் சமயச் சார்பும் உள்ளன. சுந்தரர் பெருமான் இறைவனைப் 'பித்தா என்று அழைத்தார். அவ்வாறு அழைக்கலாமா? பித்தன் என்பது இழி மொழி அன்றோ? இறைவன் என்ன சொன்னார்? என்னைப் பித்தன் என்றே அழை, என் சித்தம் மகிழ்வேன்" என்று கூறினார். "இது யாது காரணம் பற்றிக் கூறியது? அன்பும் நெருக்கமும் உடையவரை இழிசொல் கொண்டு உரைப்பது பழிச் சொல் ஆகாது; விழி மூன்று படைத்தவனே வழிகாட்டி உள்ளான்", "நீ என் மாணவன்; ஒரு நாள் பழகினும் நம் கேண்மை நிலைத்து நிற்கும் நீ அன்றும் என் மாணவன்; இன்றும் அதே நிலைதான்; நாளையும் அஃதே" என்று விளக்கம் தந்தார். அவர் கூற்றிலிருந்து அது தரக்குறைவான சொல் என்பது அறிய முடிந்தது. "இதற்குப் பொருள் கூற இயலுமா?" "என்னைச் சிக்கலில் சிக்க வைத்துவிடாதே! எந்த இலக்கியச் சான்றும் இதற்குக் கூற இயலாது. நிகண்டுகள் கற்கண்டுகள் ஒன்றும் விளக்கம் தரும் நிலையில் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/105&oldid=802382" இலிருந்து மீள்விக்கப்பட்டது