பக்கம்:படித்தவள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 Uाé 4 புலவர் வருகை புதுமை தந்தது. என் மனைவியின் கையில் நாடகத்துக்கு டிக்கட் வாங்கி வைத்துக் கொண்டு என்னைப் புறப்படத் துண்டினாள். “என்ன நாடகம்?" "தமிழ் நாடகம்?" "தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கிறதே" "அப்படித்தான் இருக்கும்; நாடகத் தலைப்புக்கள் தமிழில் இருந்தால் கலெக்ஷன் கம்மியாகிவிடுகிறதாம்; புராணக்கதை என்று தவறாக நினைத்து விடுகிறார்களாம்." "பொத்தானைச் சரியாக மாட்டுங்கள். இவர்தானா உன் அத்தான் என்றால் உங்களை ஒப்புக் கொள்ள முடியாமல் போகும். "பொத்தானுக்கும் அத்தானுக்கும் என்ன தொடர்பு?” "அது தான் தமிழ்: பொத்தான் கூடப் போடத் தெரியாதவர் இவராடி உன் வீட்டுக்காரர் என்று கேலி பேசுவார்கள்” "நாடகத்திலே என்ன கதையாம்?" "கதையே இருக்காது; கதை இருந்தால் சிரிக்க வாய்ப்பு ஏற்படாது. அது மவுன ராகமாக மாறிவிடும்" "சிரிக்க ஒரு ೧Tುಲಿ; வீட்டிலே சிரிக்க முடிவதில்லை. அதனால் நாடகம் பார்க்க வருகிறார்கள்" "சிரிப்பதற்கா ஒரு நாடகம்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/108&oldid=802388" இலிருந்து மீள்விக்கப்பட்டது