பக்கம்:படித்தவள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
படித்தவள்
1

திண்ணைத் தூங்கி என்று சொல்வார்கள். அந்தப் பாக்கியம் எனக்கு இல்லாமல் போய்விட்டது. ஏன் என்று கேட்கிறீர்களா? எங்கள் வீட்டில் திண்ணை வைத்துக் கட்டவில்லை. அதன் அவசியத்தை இந்த நூற்றாண்டு இழந்துவிட்டது; அதுதான் காரணம்: பிளாட்டு வாங்கி ஃபிளாட் கட்டும் காலம் இது.

திண்ணை வேதாந்தம் பேசிப் பழக்கம். அதற்கு ஒரு பண்ணையார் எனக்குக் கிடைத்து வந்தார். அவருக்கு வேதாந்தம் பேசுவது ரொம்ப பிரியம். பிராணாயாமம் என்பது பற்றிப் பேசி என் உயிரை வாங்கி விடுவார். அதனால் ‘காயசித்தி’ ஏற்படும் என்று கூறுவார்

சின்ன வயது; ஆறு இருக்கும்; அச்சரப்பாக்கம் கூட்டு ரோடு; அங்கே என் கிழிந்த புத்தகங்களைப் போட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பேன். ‘டீ’ கடையில் சூடான ‘டீ’ அதைக் குடிக்க முடியாமல் ஆறட்டும் என்று கையில்வைத்துக் கொண்டு ஒரு சிலர் பொழுது போக்குவதை ஒரு கலையாக அனுபவிப்பதைப் பார்த்திருக்கிறேன். அது அன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/11&oldid=1123423" இலிருந்து மீள்விக்கப்பட்டது