பக்கம்:படித்தவள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 शााd' ஒரு கிழவி இருக்கிறாள்; காது கேட்காது; மணிசப்தம் கேட்டதும் ஒடி வந்து விழுவாள்; எழுவாள்; கைதொழுவாள்; வாய் விட்டு அழுவாள்; மழுவாள் படை ஏந்திய பரசுராமனைப்போல் இராமனைச் சந்திப்பாள். பல் செட்டைக் கழற்றிக் கையில் காட்டுவாள்; என் பல் முப்பத்திரண்டும் சேர்ந்து வந்து விட்டது. என்ன சொல்கிறாய். பல் இல்லாவிட்டால் யார் என்னைச் சட்டை செய்வார்கள்; என் வாலிபமே பறி போய் விட்டது என்று கத்துவாள். சத்தம் செய்யாமல் பத்து ரூபாய் நீட்டுவேன்; அப்பொழுது மறுபடியும் அதை வாயில் வைத்து மாட்டுவாள்; இப்படி இவள் பலரை வாட்டுவாள்; இது அன்றாட நிகழ்ச்சி" என்றான். "அசல் பல் எங்கே என்று கேட்டேன்; அடகு வைத்து விட்டேன் என்றாள்" என்று கூறினான். எனக்குப் புரியவில்லை; பல்லை எப்படி அடகு வைக்க முடியும்? புதுப் பிரச்சனையை எனக்குத் தந்து விட்டான். கிழவியின் பல்லை வைத்துக் கொண்டு எந்த மார்வாடி பணம் கொடுத்திருப்பான். ஏற்கனவே 'கம்மினாட்டி' என்ற சொல் அதற்கு இன்னும் பொருள் காண முடியாமல் திசை எட்டும் திரிகிறேன்; அதோடு மற்றொன்று. இதற்கு என்ன கருத்து? என் தலையைப் பிய்த்துக் கொள்கிறேன். மயிர் முடிதான் மிச்சம். "ஆதிமூலம் என்று அழைத்த கஜேந்திரன் தனக்கு அடைக்கலம் தந்தான்; நீ இறைவனை வேண்டு; தியானம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/112&oldid=802398" இலிருந்து மீள்விக்கப்பட்டது