பக்கம்:படித்தவள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 णाdf மறுநாள் அவர்கள் பணி தொடங்குவதற்கு முன் கம்பர் அந்தப் பணியில் அங்குப் போய்ச் சேர்ந்தார். மற்றவன் பாடத் தொடங்கினான். "வாங்கும் கதிரோனே" என்று முடித்தான். “மூங்கில் இலைமேலே துங்கும் பனிநீரே துங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே" என்று பாடி முடித்தானாம். மூங்கில் இலைமேல் பனிநீர் இரவில் வந்து தங்குகிறது. பொழுதுவிடிகிறது; சூரியன் தோன்றியதும் அதன் கிரகங்கள் பட்டு அவை சுண்டிவிடுகின்றன. இதை அந்த ஏடு அறியாத பாட்டாளி பாடினான்; கம்பர் வியந்தார். அந்தக் கவிதைக்கு ஆசான் யார்? எப்படி இவர்கள் பாடினார்கள்? கவிஞர்கள் என்றா பிறக்கிறார்கள்; அவர்கள் கற்றுப் பாடுவது இல்லை; கண்டு பாடுகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தாராம். 'ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு இல்லை என்ற பழமொழியே உண்டாகி விட்டதாம். அதாவது அதற்கு நிகரான பாட்டு எங்கும் யாரும் பாடமுடியாது என்ற சொல் வழக்கு உண்டாகிவிட்டது. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி மூன்று கேள்விகள் வைத்திருந்தாள். அந்த மூன்று கேள்விகளைக் கேட்டுச் சரியாகச் சொல்லாதவர்கள் தலைகளை வெட்டச் செய்தாளாம்; அவற்றை மதில்களில் மாட்டி வைத்தாளாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/114&oldid=802404" இலிருந்து மீள்விக்கப்பட்டது