பக்கம்:படித்தவள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 gnréf கோபியை அடக்கி மடக்கிப் பட்டியில் அடைப்பதே இந்த டியூஷன் மாஸ்டர்கள்தான். எங்கள் காலத்திலே நாங்கள் எங்கே படிப்பதைப் பற்றிக் கவலைப் பட்டோம். படிப்புதான் எங்களைப் பற்றிக் கவலைப்பட்டது. இப்பொழுது காற்றாடி விடக்கூடத் தடை, அது யார் கழுத்தையோ அறுத்து விட்டதாம். அந்தக் காலத்திலே தெருவிலே கோலி விளையாடுவோம்; பம்பரம் சுற்றுவோம்: "சடுகுடு ஆடுவோம்; கில்லி விளையாடுவோம். அதெல்லாம் இப்பொழுது எங்கே பார்க்கமுடிகிறது. பணக்காரப் பிள்ளைகள் சிலர் கிரிக்கெட்டு ஆடுகிறார்கள். திடீர் என்று ஒரு செய்தி. புருஷன் தன் மனைவி கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டுப் போலீசுலே சரண் அடைகிறான் அப்பத்தான் கொலைன்னா என்ன என்று கேள்விப் பட்டேன். அன்றைக்குப் பள்ளிக்கூடம் போகவே இல்லை; புத்தகக் கட்டு எங்கே வைத்தேன் என்று மறந்தே விட்டேன். இருபது வருஷம் ஆகிறது: டெய்லர் கடையில் வைத்துவிட்டேன்; இப்பொழுது போகிறேன். அவர் மகன் என்னிடம் எடுத்துத் தருகிறான் சார் உங்க பேரு போட்டிருக்கு என்று எடுத்துக் கொடுக்கிறான். மலரும் நினைவுகளை அந்தப் புத்தகங்கள் ஏற்படுத்துகின்றன. பிற்காலத்தில் அன்னா கரீனா கதை படித்தேன். டால்ஸ்டாய் எழுதியது. அதைப் படித்ததும் அந்தக் கொலை எவ்வளவு முட்டாள்தனம் என்று தெரிந்தது; தெரியுது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/116&oldid=802407" இலிருந்து மீள்விக்கப்பட்டது