பக்கம்:படித்தவள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 123 எனக்கும் இது அதிர்ச்சியைத் தந்தது. இதைக் கேட்டுவிட்டு ஆண்கள் இராமச்சந்திர மூர்த்திகளாகத்தான் இருக்கவேண்டும் என்ற இறுக்கம் ஏற்படுகிறது. போகட்டும். இன்னொரு பெண்ணைத் தொடாமல் இருக்கலாம் (பஸ் நெருக்கடி தவிர்க்க முடியாத இடம்) கிடக்கட்டும். சிந்தையாலும் தொடக் கூடாது என்றால் மற்றவர்கள் எவ்வளவு வருத்தப்படுவார்கள். சிந்தித்துப்பார்க்க வேண்டிய விஷயம். "ஒருவனுக்கு ஒருத்தி” என்பதே எத்தனை நாள் தாக்குப் பிடிக்கிறது பார்க்கலாம்; அழகு பலருக்கும் உரியது: உடம்பு வேண்டுமானால் ஒருவனே உரிமை கொண்டாடலாம். பெண்கள் இதை விரும்ப மாட்டார்கள். கட்டியவன் ஒருவனுக்காக மட்டும் அவர்கள் உடுத்துவது இல்லை. மற்றைய பெண்கள் மெச்சிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆண்களும் பாராட்டவேண்டும் என்று விழைகிறார்கள். முக்காடு இட்டு மூடி வைத்துத் தெருவில் முட்டாமல் சென்றது பழைய காலம். இந்த எண்ணங்கள் எனக்குள் தோன்றின. அரபு நாட்டிலும் விழிப்பு ஏற்பட்டுவிட்டது. மேற்கே இருந்து தோன்றும் சூரியன் புதிய ஒளியை வீசிக்கொண்டு இருக்கிறான். என் நண்பன் ஒரு அப்பாவி என்பதைப் புரிந்து கொண்ட என் துணைவி அவன் வருகையை வெறுப்பதை விட்டாள்; புது வகை நேசம் உருவாகிவிட்டது. அறிவாளியைவிட அப்பாவிக்கு வரவேற்பு மிகுதி எனத் தெரிந்தது. கோமாளித்தனமும் எனக்கும் தேவைப்பட்டது. அதை அவன் நிறைவேற்றிக் கொடுத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/125&oldid=802426" இலிருந்து மீள்விக்கப்பட்டது