பக்கம்:படித்தவள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 शाd "அவளோடு எப்பொழுதுதான் கண்டு பேசமுடிகிறது:” "வீடு வர ஒன்பது ஆகிறது. சில சமயம் நானே சமைத்து வைப்பேன்; அவள் தானே போட்டுக் கொள்வாள்” என்று விளக்கினான். ஆனந்தன் வீட்டில் தங்குவது குறைந்து விட்டது. பொழுது போக அவன் இங்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தான். என் மனைவிக்கும் சலிப்பு ஏற்படவில்லை. 9 என் மனைவி மாதர் சங்கம் செல்வதைக் குறைத்துச் கொண்டாள். கோயிலுக்கு அதிகம் செல்லத் தொடங்கினாள். புதுமையாக இருந்தது. காற்று இடம் மாறி வீசுவதைக் கண்டு வியப்பு அடைந்தேன். "ஏன் கோயிலுக்கு அதிகம் செல்கிறாய்?" என்று துணிந்து கேட்டேன். நாற்பதுக்கு வர வேண்டிய ஆசாரம் இவளை இப்பொழுது பற்றுவது ஏன் என்ற விசாரம் எனக்கு ஏற்பட்டது. "மனம் சரியாக இல்லை. அதற்கு மார்க்கம் கோயில் என்றுதான் தோன்றுகிறது" என்றாள். "ஞானியாக மாற வேண்டிய காரணம்?" "என் மனசு வருந்துகிறது; உங்களுக்குத் துரோகம் செய்து விட்டேன்" என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/128&oldid=802432" இலிருந்து மீள்விக்கப்பட்டது