பக்கம்:படித்தவள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் t27 ஈட்டிக் கொண்டு பாய்ச்சினாள். அவள் தவறு செய்வாள் என்று நான் எண்ணியதே இல்லை; அழகு அப்படி அபரிமிதமாக இல்லை. பொதுவாக அவள் என்னைத் தவிர மற்றவர்களைக் கவர்ந்தது இல்லை; அதிலே எனக்கு ஒரு மனநிறைவு. "கெட்டு விட்ட பால் கொட்டிவிடவேண்டியதுதான் நெஞ்சில் ஒரு முள்ளாக அது தைக்கிறது. எனக்கு விடுதலை இல்லை" என்றாள். காரணம் சமூகம் என்னை மன்னிக்காது "இரண்டே வழிகள் உள்ளன. ஒன்று நைந்து நைந்து மாள்வது அல்லது உண்மையை ஒப்புக்கொண்டு உம் கையால் சாவது” என்று கூறினாள். "நீ எதை விரும்புகிறாய்?" "உம் கையால் நான் சாகவேண்டும்" என்றாள். இந்த வீட்டில் இப்படி ஒரு மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. குற்றவாளி யார்? என்று கேட்டு அவள் மனத்தை நோகவைக்க விரும்பவில்லை. "எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடு; முடிவு சொல்கிறேன்" என்றேன். "தவறு செய்த எனக்கு விவாகரத்து மட்டும் வேண்டாம்; யாரும் என்னை நம்பமாட்டார்கள். ஒன்று நீர் என்னைக் கொலை செய்துவிட வேண்டும், அல்லது நான் துரக்குக் கயிற்றில் மாட்டிக்கொண்டு சாகவேண்டும்; அந்தக் கயிறு உங்களால் மாட்டப்படவேண்டும்" என்று வேண்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/129&oldid=802434" இலிருந்து மீள்விக்கப்பட்டது