பக்கம்:படித்தவள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ψΠréf கொண்டாள்; என் நண்பன் என்னிடம் வருவதைக் குறைத்துக் கொண்டான். என் வாழ்வு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு வாரம் நாங்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. சின்ன வயதில் சிரித்து விளையாடிக் கொண்டிருந்த பருவம். அன்று நடந்த கொலை; அவள் இறந்தது; கணவன் சிறைத் தண்டனை ஏற்றது; அதன்பின் விடுதலை அடைந்தது. அன்னாகரீனா நாவல் வந்து என் மனத்தைக் கலைத்தது. அவள் ஒரு அன்னாகரினாவாகக் காணப்பட்டாள். 10 சிரித்துக் கொண்டே இருந்த என் வாழ்க்கையில் சிந்தனைகளைப் புகுத்திவிட்டாள். நான் ஒரு எந்திர் மனிதனாக இருந்திருந்தால் உடனே தொடர்ந்து செயல்பட்டு இருப்பேன். நெஞ்சில் ஒரு முள்' என்ற நூலைப் படித்து இருக்கிறேன். அது என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து கிடந்தது. எவ்வளவு பெரிய அறிஞர் ஆசாரக் கோவைக்கு அடிமையாகிப் பெண்ணை அடிமை செய்யும் ஆதிக்கமான நூலை எழுதி விட்டார் என்று வருந்தியது உண்டு. அந்த முள் என் நெஞ்சைத் தைத்தது. அதனால் பாதிக்கப்பட்டவன் நான. என் அறிவு புரட்சி செய்து கொண்டே இருந்தது. அது இன்று என்னைக் காத்தது. அந்தக் கீழ்மைக்கு நான் செல்லத் தேவை இல்லை என்பதை உணர்ந்தேன். நம்முடைய ஆசாரங்களையும் மதிப்பீடுகளையும் அலசி ஆராயும் காலம் வந்து விட்டது. அறிஞர்கள் என்றால் சுயமாகச் சிந்தித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/130&oldid=802438" இலிருந்து மீள்விக்கப்பட்டது