பக்கம்:படித்தவள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 129 எழுத வேண்டும். திருக்குறளை ஒப்புவித்து அதற்கு விளக்கங்களைத்தர எழுத்தைப் பயன்படுத்திவிடுவதால் வரும் விளைவு இது என்று எண்ணி வருந்தியது உண்டு. இதனையும் அழிவு இலக்கியங்களில் ஒன்றாகக் கருதியது உண்டு. நீதிபோதனை என்ற பெயரில் பெண்களின் சுதந்திரத்தைக் கண்டிப்பது, அதற்காக அவர்களைத் தண்டிப்பது இவை இரண்டும் தவறு என்ற கருத்து அடிப்படையில் என்னுள் ஊறிக் கிடந்தது. இப்பொழுது என் துணைவி துணிந்து தன்னைக் கொலை செய்து விடு என்கிறாள். அவசரப்படவில்லை. ஆவேசப்படவில்லை. இனிமேல்தான் என் சிந்தனைகளுக்குச் சுருசுருப்புப் பிடிக்கிறது. "நீ என்னைக் கொலை செய்துவிடு" என்று மிக எளிதில் கூறிவிட்டாள். பேனா எடுத்துப் பழகிய கை இது கத்தி எடுக்கத் தெரியாது. மானம் உள்ளவன் என்று பேசுவார்கள். நிதானம் இழந்துவிட்டான் என்று ஏசாமல் இருப்பார்களா? அவள் தற்கொலை செய்துகொள்ள நான் கயிறு எடுத்துக்கொடுக்க வேண்டுமாம். ஏன்? கொலைக்குற்றம் என்னைச் சாராமல் இருப்பதற்கு. அவள் பதிபக்தி இந்த அளவுக்கு எனக்கு உதவி செய்ய நினைக்கிறது. அவள் தற்கொலை செய்துகொண்டால் உலகம் என்ன சொல்லும்? என்னைக் கொடுமைக்காரன் என்று கூறும். சட்டம் வரதட்சணை கேட்டேன் என்று உள்ளே தள்ளி விசாரிக்கும். இன்று பாரதம் கொலையை ஒரு கலாச்சாரமாகக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட் ஆட்டத்தில் ஸ்கோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/131&oldid=802440" இலிருந்து மீள்விக்கப்பட்டது