பக்கம்:படித்தவள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 131 மற்றவர்கள் பழிதீர்ப்பது உறுதி. அவனுக்கு ஆயுள் தண்டனை விதித்தார்கள். அவன் விடுதலை பெற்று வெளியே வந்திருந்தான். அவனை வழியில் சந்தித்தேன். "இவனா கொலையாளி?" அப்பாவியாக இருக்கிறான். இவன் எப்படிக் கொலை செய்தான்? சாதுவான மாடுதான்; மிரண்டு குத்திவிடுகிறது. "நீ கொலை செய்துவிட்டு ஆயுள் தண்டனை அடையவில்லையா?" என்று கேட்டுவிட்டேன். "அன்று எனக்கு மன்னிக்கும் மனப்பக்குவம் இல்லை; அவளையும் வாழவிட்டிருப்பேன்; நானும் வாழ்ந்திருப்பேன். அவள் எனக்காக வாழ்ந்தாள்; எனக்காகத் தன் உழைப்பை எல்லாம் தந்தாள்; சுகம் தந்தாள்; என் கனவுகள் கற்பனைகள் எல்லாம் அவள்தான். உணர்ச்சி வசப்பட்டு அவள் உயிரைப் போக்கினேன்; அதற்கு உரிய தண்டனை அனுபவித்துவிட்டேன். அந்தக் கொடுமை மிக்க சிறையில் அவள் உருவம்தவிர வேறு எந்த வ்டிவமும் என் நினைவுக்கு வராது. அவளோடு நான் கழித்த இன்ப நாட்கள் அந்த நினைவுகள் என்னைப் புரட்டி எடுத்துவிடும். திடீர் என்று அவள் செய்த தவறு முன் வந்து நிற்கும். நான் கொலைகாரனாக மாறிய கொடுரம் நினைவிற்கு வரும். அப்புறம் அடங்கிவிடுவேன். எவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/133&oldid=802444" இலிருந்து மீள்விக்கப்பட்டது