பக்கம்:படித்தவள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 133 11 அன்று வந்த சோபனா வேறு; இன்று ஆனந்தனோடு என் வீட்டுக்கு வருகிற சோபனா வேறு. பெரிய மாற்றம். அன்று சம்பிரதாயங்கள் சார்ந்த கட்டுப் பெட்டியாகப் பாரதப் பழம்காலச்சாரத்தின் பிரதிநிதியாகக் காட்சி அளித்தாள். என் மனைவிதான் அவளை மாதர் சங்கத்தில் சேர்த்தாள். கலை, நாட்டியம், இசை இந்த நுண்கலைகளில் தேர்ந்தவளாக மாறி விட்டாள். மாதர் சங்கத்து ஆண்டு விழாவில் மகத்தான நாடகம் ஒன்று நடைபெற்றது. அதற்கு எனக்கும் அழைப்புத் தந்திருந்தனர். ஆனந்தனும் வந்திருந்தான். ஆனந்தியின் கணவன் நான் என்று அறிமுகப்படுத்தப் பட்டேன். நாடகத்துக்குத் தலைமை தாங்கும்படி சொல்லி இருந்தார்கள். பொதுவாக டைரக்டர்களைக் கொண்டுதான் அவர்கள் முன்னிலையில் இந்நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அதனால் திரைப்படத்தில் நுழைய வாய்ப்பு உண்டு என்பதால், சோபனாவுக்கு நான் தலைமைதாங்க வேண்டும் என்பது விருப்பம். அதை என்னால் தள்ள முடியவில்லை. ஆனந்தனும் ஆனந்தியும் கீழே பக்கத்துப் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் தம்பதிகள் போல் எனக்குக் காட்சி அளித்தனர். எனக்கு எதிர்ப்போ வெறுப்போ' தோன்றவில்லை. என் மனம் பண்பட்டுவிட்டதை உணர்ந்தேன். புண்பட்ட மனம் எப்பொழுதோ ஆறிவிட்டது. அன்று மேடையில் மாதர் சங்கத்தைப் பாராட்டிப் பேசினேன். பெண்களைக்- குடும்பத்துக்குள் அடக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/135&oldid=802447" இலிருந்து மீள்விக்கப்பட்டது