பக்கம்:படித்தவள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ग़ा6# அவர்களைச் சமூக எல்லைக்குப் போகாமல் தடுத்து வந்தோம். அவர்கள் பழைய கலாச்சாரங்களையே போதித்துக் கொண்டு கொஞ்சம்கூட மாறாமல் இருக்கக் கோயில்களுக்கு மட்டும் அனுப்பி வைத்தோம். அங்கே சத் காலட்சேபங்கள் கேட்க வைத்தோம். பெண் என்றால் அவள் சாவித்திரியாகத்தான் இருக்க முடியும்; சீதை கண்ணகி இவர்கள்தாம் பெருமை மிக்கவர்கள் என்று பதிய வைத்தோம். இன்று பெண் கம்ப்யூட்டர் யுகத்தில் கால் வைக்கிறாள். ஆண்களோடு பழகும் வாய்ப்புகள் மிகுதி, கலாச்சாரங்கள் மாறிக் கொண்டு வருகின்றன. பெண் அவள் அழகு ஒருவனுக்குத்தான் சொந்தம் என்று கருதப்பட்டது. இன்று அது பலருக்கும் உரிமை ஆகிறது. அது கலை வடிவில் இருக்கலாம்; காட்சி வடிவில் நிற்கலாம்; சிரிப்பு வடிவில் மாறலாம்; அறிவு வகையில் விளங்கலாம்; அவள் கலகலப்பாக வாழும் காலம் வந்து விட்டது என்று பாராட்டிப் பேசினேன்; அதற்கு நன்றி கூற இருவரும் என் வீட்டுக்கு வந்தனர். "நீர் மிகவும் சிறப்பாக நடித்தீர்” என்று பாராட்டினேன். காஃபி சூடாக என் மனைவி கொண்டு வந்து வைத்தாள். "இப்பொழுது Hot drinks" என்றேன். "எல்லாம் பழகி விட்டது” என்றான். "எப்படி” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/136&oldid=802448" இலிருந்து மீள்விக்கப்பட்டது