பக்கம்:படித்தவள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 शााd¥ அதற்குச் சான்றாக அவர் கற்றிருந்த பண்டைத் தமிழ் நூலில் இருந்து பாட்டு ஒன்றை அவிழ்த்து விட்டார். அதன் கருத்து இது தான். "கற்றது கைம் மண்ணளவு: கல்லாதது உலகு அளவு: என்று உற்ற கலை மடந்தை ஒதுகிறாள். அதனால் கல்விக்குக் கரையே இல்லை; நமக்குத்தான் அதன் மீது அக்கரை இருப்பது இல்லை; நம் வாழ்நாள் முழுவதும் போதாது” என்று கூறினார். "நாள் எல்லாம் கற்றுக்கொண்டிருந்தால் நம் வேலை செய்ய ஆள் ஏது? அது தவிர வேறு நாம் ஏதும் செய்ய முடியாதே" என்றேன். "எத்தொழிலைச் செய்தாலும் ஏது அவத்தைப் பட்டாலும் முத்தர் மனம் மோன நிலையை விட்டு நீங்காது என்பர். அது போல எந்தத் தொழிலைச் செய்தாலும் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும்" என்றார். "சதா ஒருவன் படித்துக் கொண்டிருந்தால் அவன் பைத்தியம் பிடித்து மனநோய் மருத்துவ மனை அடைந்து விடுவான்" என்றேன். "நூல் பல கற்றாலும் தன் நுண்ணறிவே மிகும்; நூல் பல கற்பதால் மட்டும் பயனில்லை; வாழ்க்கையை நுணுகி ஆராய வேண்டும்” என்றார். "அதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டேன். அதற்குக் கால் குறள் ஒப்புவித்தார்; இரண்டே சொற்கள்; "எண்ணித் துணிக" என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/138&oldid=802450" இலிருந்து மீள்விக்கப்பட்டது