பக்கம்:படித்தவள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ராசீ


இன்பம்; பொழுதுபோக்கு; ‘டீ’ சூடாக இருக்கிறது. ஆறட்டுமே அதற்கு என்ன அவசரம்.

வியாபார வனிதை அவள் கொண்டு வந்தபண்டத்தை விலை கூறி விற்கக்கூடாதா? “வாங்கிக் கொள்ளுங்கள்” என்று மன்றாடுகிறாள். அவள்விற்பனைப் பொருளில் தரம் இல்லை; அவள் வாங்கி வந்த வரத்தைப் பற்றி முன்னுரை கூறி என் மனக் கட்டிடத்தை நெகிழ வைக்கிறாள். அதாவது இந்த வியாபாரம் அவளுக்குச் செய்யும் உதவி என்பது போல் இருந்தது.

அந்தக் குண்டு பையன் ஏதாவது கடித்துக் கொண்டே இருப்பான். ‘சாக்லேட்’ அவன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு ஒரு சின்னத் துண்டு கடித்துக் கொடுப்பான்.

‘போடா எச்சில்’ என்று மற்றவர்கள் அவனை அழைப்பது பேசுவது சிரிப்பாக இருக்கும்.

‘கடித்துத் தராதே தடித்த பையல் நீ’ என்று ஒல்லிக் குச்சுப் பையன் சொல்லிவிட்டு ஓடி விட்டான்.

எனக்கும் சாக்லேட்டு கடிக்கக் கொடு என்று கேட்க ஆசைதான். கேட்க முடியுமா? வயது ஆகிவிட்டது. எந்த ஆசையும் கூடாது; கேட்டால் அவன் என் சின்னத்தனத்தைக் கண்டு துரைத்தனம் பேசுவான்.

அந்தப் பண்ட விற்பனை வனிதை வாய்திறந்து ஏதாவது தன்னைப்பற்றிச் சொல்வாள் என்று எதிர் பார்த்தேன். பண்டத்தைவிட அந்த அம்மையின் வாய்ச் சுவையை விரும்பினேன். கதை கேட்கும் ஆர்வம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/14&oldid=1123426" இலிருந்து மீள்விக்கப்பட்டது