பக்கம்:படித்தவள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 शााd என் முன் அறையில் பிரேம் போட்ட படம் ஒன்று மாட்டி இருந்தேன். தூக்குக்குச் சென்ற பகத்சிங்க் படம் அது. "இவர் யார்?" என்று கேட்டார். "இவர் கொலையாளி அல்லவா’ என்று கேட்டார். "ஆம்" என்றேன். "இவர் படத்தை மாட்டி வைத்து இருக்கிறாயே!” என்று கேட்டார். "தியாகி; அந்நியனைத் துணிந்து கொன்ற புரட்சியாளர்" என்றேன். "கொலை செய்தவர்தானே." "தேசம் போற்றும் மாவீரன்" என்றேன். "போற்றத்தக்க பண்பு யாது?’ என்று கேட்டார். "கொலை" என்றேன். "அது துற்றத் தக்கது: காந்தி ஒருவர்தான் மகத்தான செயல் செய்தவர்." "எல்லோரும் எப்படிக் காந்தியாக முடியும்" என்று கேட்டேன். "நீ கூறும் மாவீரர்கள் அவர்கள்தாம் துப்பாக்கிக் கலாச்சாரம் புகுத்தியவர்கள். அன்று அவர்கள் செய்வது &ff என்று நினைத்தார்கள். நாட்டுப் பற்றுக் காரணம் என்று கூறலாம். என்றாலும் துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு வித்திட்டவர்கள் இம்மும் மூர்த்திகள்தாம் என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/140&oldid=802453" இலிருந்து மீள்விக்கப்பட்டது