பக்கம்:படித்தவள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 शााdf "அவன் மறுபடியும் கொலை செய்து விட வாய்ப்புத் தராமல் இருக்க. இவர்கள் குறையே அவசரப்பட்டுத் தன்னை இழந்து விடுவார்கள். அதனால் தவறு செய்ய வாய்ப்பு ஏற்பட்டு விடும். மற்றவர்கள் இதை அனுசரித்துக் கொண்டு வேண்டிய பொருள் உதவி செய்து அனுப்பி விடுகிறார்கள். "உனக்கு ஏன் இந்தப் படங்கள்?" என்று கேட்டார். ஒன்று நாட்டுப் பற்றை உண்டாக்குகிறது; மற்றொன்று வீட்டுப் பற்றைக் காக்கிறது." அவருக்குப் புரியவில்லை; நானும் விளக்கிக் கொண்டிருக்க விரும்பவில்லை. என் மனைவி காஃபி கொண்டு வந்து கொடுத்தார். அதைக்குடித்து முடிப்பதற்குள் எதிர் வீட்டுக் கோபி வந்து சேர்ந்தான். வரும்போதே ஏதாவது பிரச்சனையோடு வருவது வழக்கம். "எங்கே வந்தாய்?" என்று கேட்டேன். "என் டியூஷன் மாஸ்டருக்குத் தெரியவில்லை; அவருக்குத் தமிழ் தெரியாதாம்." "தாய்மொழி தமிழ்தானே" "அதனால் தான் அதைச் சரிவரக் கற்கவில்லையாம். தமிழாசிரியரைக் கேட்டுத் தெரிந்து கொள் என்று சொல்லி விட்டார். குடையும் செருப்பும் இங்கே உள் நுழைவதைக் கண்டு ஓடோடி வந்தேன்" என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/142&oldid=802455" இலிருந்து மீள்விக்கப்பட்டது