பக்கம்:படித்தவள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

13


மானிடர்க்கு ஏற்பட்டுள்ள மனநோய். அதற்கு நான்விதி விலக்கு ஆகவில்லை. புத்தகத்தைப் புரட்டுவதை விடப் புது முகங்களை உருட்டுவதில் மகிழ்வு ஏற்படுகிறது. இந்த அம்மை என் வெறுமைக்குப் புதுமுகம்தான். அவள் தன் வியாபாரத்துக்காகத் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். அவள் நரி முகத்தில் விழித்தாள். நான் அவள் விரும்பும் அளவுக்குப் பண்டங்களை வாங்கியதால்.

அவள் கூறும் செய்திகள் கதை கேட்பது போல் இருந்தன.

“எல்லாவற்றையும் மெல்ல மெல்லத் தோற்று விட்டு இந்தக் கதிக்கு வந்துவிட்டோம்” என்றாள்.

“இழப்புக்குக் காரணம்?”

“அவர் சரியாக இல்லை”

அதைக்கேட்டு அறிய வேண்டும் என்று வேடிக்கையாகக் கேட்டேன்.

“எப்படி அழித்தார்?” என்றேன்.

அவள் நகை இழந்த முகத்தில் என்னால் நகை உண்டாக்க முடிந்தது.

“அதனால் உங்களுக்குப் பயன் இல்லை. அதைத் தெரிந்து கொண்டு நீங்கள் பயன் அடைய முடியாதே” என்று கூறினாள்.

என் இயலாமையை அவள் சுட்டிக் காட்டியது எனக்கு ஒரு பாடம்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/15&oldid=1123427" இலிருந்து மீள்விக்கப்பட்டது