பக்கம்:படித்தவள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 एाé# டி.வி. பெட்டிகள் மூலைக்கு ஒன்று எதிர்த்துக் கொண்டு காசெட்டுகளில் பதிவாகும் படங்களைப் பரப்பி வைத்தன. கட் அவுட் அங்கு அங்கு வைத்ததுபோல் ஜோடிப் புறாக்களைக் காட்டிக் காட்டிக் காட்சிப் பொருள் ஆக்கினர். ஒரே சமயத்தில் மணத் தம்பதியர் படங்களை எல்லாப் பெட்டிகளிலும் காண முடிந்தது. நீண்ட காலம் பழகியவர்களைப்போல அவர்கள் குழைந்து பேசினர். வந்தவர்களை அறிமுகப்படுத்தி அடையாளம் காட்டிக் கொண்டு இருந்தனர். கூட்டத்தில் கூடி நின்று அவரவர்கள் தம் பாட்டுக்கு ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். பல நாள் பார்க்க முடியாத உறவு முகங்களை அங்குக் காண முடிந்தது. பத்து வருஷத்துக்கு முன் சொந்தப் பல்லில் சிரித்தவர்கள் கட்டிய பல்லைக் கொண்டு இளிக்க நேர்ந்த மாறுதல்களைக் காண முடிந்தது. ஒரு சிலர் ஒதுக்குப் புறமாகப் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தனர். சரியாகச் சொன்னால் காதைக் கடித்துக் கொண்டிருந்தனர் என்பது பொருத்தமாகும். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்ன நினைக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக ஏதோ கட்டுக்கதை ஒன்று அவர்கள் கவித்துவம் செய்கிறார்கள் எனத் தீர்மானிக்க முடிந்தது. காதலித்தவனை அவள் கைவிட்டுப் பெற்றோர்கள் கைகாட்டுபவனுக்குக் கழுத்தை நீட்டுகிறாள் என்று காற்றோட்டமாக அவர்கள் பேச்சோட்டம் இருந்தது. காதலுக்கு அவள் பாதகம் செய்துவிட்டாள் என்பது அவள் மீது சார்த்தப்பட்ட குற்றச் சாட்டாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/152&oldid=802466" இலிருந்து மீள்விக்கப்பட்டது