பக்கம்:படித்தவள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனை நலம் 15t அவள் சுத்தமாக இல்லை என்று இவர்கள் சத்தமாகவே பேசினர், நகம் பட்ட கனியாம்; எச்சில்பட்ட மிச்சிலாம்; கடித்துவிட்ட காயாம்; படுத்துவிட்ட பாயாம்; மடுத்து விட்ட மழையாம்; இப்படி விருப்பப்பட்ட உவமைகள் உருவகங்கள் அந்தப் பசும் பயிருக்குக் கூறப்பட்டன. பெண்ணைப்பற்றிக் கண்ணியக் குறைவாகப் பேசுவதைக் கண்டிக்க நேர்ந்தது. ஒரம் பேசுவது சாரம் அற்றது என்று வாரம் பேசினேன். ஒட்டை வாயைச் சாட்டை கொண்டு அடிக்கத் தோன்றியது. விருந்து உண்ணவந்த இடத்தில் மருந்து பற்றிப்பேசுவது நோயின் சின்னம்; தாறுமாறாக உளறுவது அறியாமையின் பின்னம் என்று சுட்டிக்காட்டினேன். வந்தவர்கள் என்னை நொந்தவர்களாக நடந்து கொண்டனர். சிந்தனை அற்ற பேச்சு சீறத்தக்கது என்பது என சீற்றமாக இருந்தது. மாலி என் பாலிய நண்பன்; அழைப்பின் பேரில் அங்கு வந்திருந்தான்; விழைந்து வந்து அங்கு அவன் பத்தினியும் வந்திருந்தாள்; திருத்தணி மலைமேல் முருகா அவர்கள் திருமணத்தில் சோற்றுக்கும் திண்டாடிய நினைவு கண்ண தாசனின் பசுமையான நினைவுகளாகப் பளிச்சிட்டன. மணநாள் பார்த்த அவன் மனைவி மல்லிகை, இன்று இங்குப் பார்க்கிறேன். அந்த அல்லி மலர் அவலத்தைக் காட்டியது; சோகம் அவர்கள் சுக ஈனத்துக்குச் சான்று பகர்ந்தது, பாசி படர்ந்த குளம்; அதன் துாசுக்குக் காரணம் 'யாது? இச்சை கொள்வதற்கு மாறாக அவன் பச்சைக் கொடுமை இழைக்கின்றானா? கொண்டுவந்தால்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/153&oldid=802467" இலிருந்து மீள்விக்கப்பட்டது