பக்கம்:படித்தவள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 gাওঁ பெண்டு என்று இந்த மண்டு அவளை வண்டுபோல் துளைக்கின்றானா. அவள் பருத்த உருவம் புதிய கருத்தைத் தோற்றுவித்தது. குண்டாக இருக்கிறாளே உண்டாகி இருக்கிறாளா என்று கண்டதும் அவனிடம் கேட்ட முதற்கேள்வியாக முந்திக் கொண்டது. அவளை அன்று பார்த்தது; ஏறக்குறைய இடைவேளை இரண்டு வருஷங்கள் முந்நூற்று அறுபது நாள் என்று நினைக்கிறேன். இன்னும் ஒரு வாரம் போனால் மூன்று ஆண்டுகள் ஆகும். சோற்றுக்குப் பட்டபாடு நேற்றுக்கும் நினைத்தாலும் ஆற்றவே முடியாது என்று கூறலாம். அவன் தன் மனைவியைத் தனியாக உட்காரவைத்து விட்டு இனிமையாகப் பேச என்னிடம் வந்தான். அவனை ஒருமையில் அழைத்துப் பழக்கம்; அவள் முன்னால் அப்படிப் பேசினால் அவன் பெருமை குறையும். அதனால் அவன் என்னோடு கட்டிப்புரள அவள் தட்டியாகத் தடையாவாள் என்பதால் அந்த மட்டி என்னிடம் தனியே வந்து சேர்ந்தான். "என்னடா மாலி எப்படி இருக்கிறாய்" என்று கேட்பது வழக்கம்; அவனை மதிக்கவேண்டிய கட்டாயம்; அங்கு அவளோடு வந்திருப்பதால் மாற்றிக் கொண்டேன். "என்னப்பா மாலி என்ன செய்கிறாய்?" என்று விசாரித்தேன். "நல்ல ஜோலியில்தான் இருக்கிறேன்; வார இதழில் வண்ண ஒவியனாக இருககறேன்" என்று விளம்பினான். "சொல்லவில்லையே” என்று கேட்டேன். "பத்திரிகை படிப்பீர் என்று எதிர்பார்த்தேன்" என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/154&oldid=802468" இலிருந்து மீள்விக்கப்பட்டது