பக்கம்:படித்தவள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனை நலம் 153 "உன் மனைவி உண்டாகி இருக்கிறாளா?" என்று வினவினேன். "குண்டாகி இருக்கிறாள்; அது அவள் உண்டு ஆவதால் விளையும் விளைவு" என்றான். "சாப்பிட்டால் குண்டாகி விடுவார்களா” என்று கேட்டேன். "சாப்பிடாமல் இருந்தாலும் குண்டு ஆவது உண்டு சந்தோஷம் மிகுதியால்" என்று விளக்கம் சொன்னான். "குழந்தை?” "பிறந்தது; இறந்தது” என்றான். "கறந்தது கொட்டி விட்டீர்கள், கலயம் காலியாகி விட்டது." "அதிர்ச்சிதான்; அதிலிருந்து இன்னும் அவள் எழவில்லை." என்றான். "முகத்தில் தெரிகிறது" என்றேன். "யுகத்தில் மாறாது; அவள் எந்தத் திருமணத்துக்கு வந்தாலும் அழுது விடுவாள். சிரித்துக்கொண்டே அழுவாள், பார்க்கச் சகிக்காது; குழந்தை இருந்தால் அது வளர்ந்தால் இந்த மாதிரி மணமேடை ஏறுமே என்ற ஏக்கம் அவளைத் தாக்கிக் கொண்டே இருக்கும்." "அதை மாற்ற வழி இல்லையா” என்றேன். "புத்தர் பின்பற்றிய பாதை; சாவு, அழிவு, துயரம் இந்தம திரி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றால் மாறுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/155&oldid=802469" இலிருந்து மீள்விக்கப்பட்டது