பக்கம்:படித்தவள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 शााd¥ ஏற்படும் என்று ஆறுதல் கூறுகிறார்கள் மனோநிலை மருத்துவர்" என்றான். "நீர்க்குமிழி வாழ்க்கை என்ற ஞானம் வந்துவிட்டால் பின் நமக்குத் துன்பம் இல்லை" என்று என் கருத்தைக் கூறினேன். 2 உச்சி மீது Сurг6йт இடிப்பது போன்று பாண்டுவாத்தியங்கள் முழங்கிய அந்தத் திருமணத்துக்கு வந்த பிரமுகர்கள் வாழ்த்து மடல்களை வாசித்து அளித்தனர். நூல் வெளியீட்டாளர்கள் சிலர் தம்மிடம் விலை போகாத நூல்களைத் தேர்ந்து எடுத்து வந்து மணமகனுக்குப் பரிசுகள் என்று கொண்டுவந்து குவித்தனர். அதைக் காசாக்க முடியாமல் கொடுத்தவர்கள் தன் பெயரை எழுதி மாசுபடுத்தி விட்டனர். வாசித்த மடல்கள் மணவாழ்வின் மாண்பினைப் பேசும் அறத்தின் பால்களாக இருந்தன. பேசுகிறவர்கள் ஒவ்வொருவரும் "குழந்தைகளைப் பெறாதீர்; இந்த நாட்டுக்கு நீங்கள் நன்மை செய்வதாக இருந்தால் குழந்தைகளைப் பெற்றுப் போடாதீர். இந்த மண் தாங்காது" என்று பண்படப் பேசிப் பலர் மனம் புண்படுத்தினர். ஒன்றும் அறியாத சிறுமி ஒருத்தி இதைக் கேட்டு விட்டுத் தன் தாயிடம் சந்தேகம் கேட்கிறாள். "இவர்கள் கலியாணம் பண்ணிக் கொள்வதே குழந்தைகளைப் பெறவா! அதற்கு இவர்கள் என்னசெய்வார்கள்?" என்று சந்தேகம் கேட்க ஆரம்பித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/156&oldid=802470" இலிருந்து மீள்விக்கப்பட்டது